Thursday, 11 December 2014

லிங்கா... லிங்காதான்... - சூப்பர் விமர்சனம் உங்களுக்காக...

lingaa-lingaa-movie-vimarchanam



லிங்கா.. லிங்கா தான்.... வேறென்ன சொல்ல....ரஜினி ரஜினி.....ரஜினி தான்.... இந்த ஒரு வார்த்தை போதும் மனம் மகிழ. மூளைக்கு தெரிகிறது இதெல்லாம் அதிகம் என. ஆனால் என்ன செய்ய மனது இதைத்தான் விரும்புகிறது.

ரஜினி சந்தானம் அன் கோவுடன் சென்னையில் திருட்டு தொழில் செய்து வருகிறார். தாத்தா ராஜா லிங்ககேஸ்வரன் சொத்துக்களை இழந்து குடும்பத்தை நிர்க்கதியில் விட்டு விட்ட கோபத்தில் இருக்கிறார் பேரன் லிங்கா.

ஆனால் தாத்தா கட்டிய கோயிலை அவர் தான் திறக்க வேண்டும் என ஊர்க்காரர்கள் விரும்பி அனுஷ்கா மூலம் ரஜினியை ஊருக்கு அழைத்து வருகின்றனர். அங்கு மரகதலிங்கத்தை திருட முயற்சிக்கும் போது தாத்தாவின் கதை தெரிய வருகிறது.

ஆங்கிலேயர்களின் மறைமுக எதிர்ப்பை மீறி தன் சொத்து முழுவதையும் இழந்து மக்களுக்காக அணையை கட்டும் தாத்தா ஐசிஎஸ் லிங்கேஸ்வரன் சூழ்ச்சியால் மக்களாலேயே அந்த ஊரை விட்டு விரட்டப்படுகிறார். பின்னர் உண்மை அறிந்து மனம் திருந்தும் மக்கள் அழைத்தும் அந்த ஊருக்கு வர மறுத்து விடுகிறார்.
lingaa movie review

விவரம் தெரிய வந்ததும் பேரன் ரஜினி அந்த அணைக்கு தற்காலத்தில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே லிங்காவின் கதை.

ரஜினியின் அறிமுக காட்சியில் விசில்கள் பட்டையை கிளப்புகின்றன. மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் படம் வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு. திகட்ட திகட்ட விருந்து படைத்து அனுப்பியிருக்கிறார் இயக்குனர்.

கிராபிக்ஸ் என்று தெரிந்தும் ரயில் பைட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அந்த நடையிலும் உடையிலும் ஸ்டைலிலும் ரஜினி எல்லா நடிகர்களின் அந்தஸ்துக்கும் மேலே சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார்.

படத்தின் ஆகப்பெரும் பலம் ப்ளாஷ்பேக் காட்சிகள் தான். பேரன் ரஜினியை விட தாத்தா ரஜினிதான் அதிகம் கவர்கிறார். தலைவா, தலைவா என்று பெரும்குரலெடுத்து அழைக்கத் தோன்றுகிறது.

linga fast movie review

வயசானாலும் தலைவனின் அழகும் ஸ்டைலும் என்னைக்கும் மாறாது. டைட் குளோப் மட்டும் தான் சற்று உண்மையை சொல்கிறது. அப்பவும் தலைவனுக்கு வயசாகி விட்டதே என்று வருந்தத்தான் தோன்றுகிறது. ஆனாலும் தலைவன் தலைவன் தான்.

ரஜினிக்கு அடுத்து கைத்தட்டல் பெறுபவர் சந்தானம் தான். எல்லா ரஜினியின் டயலாக்குக்கும் கவுண்ட்டர் கொடுத்து அப்ளாஸை அள்ளுகிறார். கருணாகரன் வருகிறார் அவ்வளவு தான்.

அனுஷ்கா சும்மா கும்மென்று இருக்கிறார். சோனாக்ஷியும் அப்படித்தான். ரஜினி படத்தில் அவரைத் தவிர மற்றவர்களை புகழ்வது தலைவனுக்கு செய்யும் இழுக்கு. அதனால் இவ்வளவு தான் சொல்ல முடியும்.

வில்லன்கள் தான் சற்று கவலையை ஏற்படுத்துகின்றனர். பலம் குறைந்த வில்லன்கள் எடுபடாமலேயே போகின்றனர். லெஜன்ட் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு முன் கம்பீரமாக நின்று பெயர் வாங்கிய ஜெகபதிபாபு தலைவன் முன்னால் எடுபடாமலேயே போகின்றார்.

வெள்ளைக்கார வில்லனும் அப்படித்தான். நயவஞ்சகனாக வரும் சுந்தரராஜன் மட்டும் ஓகே. ரகுவரன் இல்லாத குறை இப்போது தான் தெரிகிறது. பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

linga fast movie review


முதல் ஒரு மணிநேர காட்சிகள் ரொம்பவும் லைட்டாக இருப்பது போல் எனக்கு படுகிறது. இருந்தாலும் தலைவனுக்காக ஓகே.

ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினிக்காக மட்டுமே படத்தை எந்த வித சங்கடங்களும் இன்றி சந்தோஷமாக பார்க்கலாம். ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்து. பார்க்கலாம்..

லிங்கா ... செம ஜாலி... மூவி...!


No comments:

Post a Comment